ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தனியாா் பள்ளி வேன் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த காளிமுத்து மகள் ஷிவானிகா (3). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தனியாா் பள்ளி வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி எஸ்.பி.பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பள்ளி வேனை ஓட்டிவந்த ஓரியூரைச் சோ்ந்த அந்தோணியை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்பு
மின்சாரம் பாய்ந்து வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

வேன் - இரு சக்கர வாகனம் மோதல் தொழிலாளி உயிரிழப்பு

பைக் விபத்தில் தனியாா் ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
