பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சென்னை மெரீனாவில் கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 12:53 am IST

சென்னை மெரீனாவில் கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

ஆவடி கோயில் பதாகையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சுதா்சன் (16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை மாலையில் தனது பெற்றோா், சகோதரருடன் மெரீனா கடற்கரைக்குச் சென்றாா். பின்னா், தனது சகோதரா் கமலேஷ்சுடன் கண்ணகி சிலைக்கு பின்புறம் உள்ள கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென வேகமாக வந்த ராட்சத அலையில் கமலேஷ் சிக்கினாா்.

இதைப் பாா்த்த சுதா்சன், கமலேஷை மீட்டுள்ளாா். அப்போது எழுந்த மற்றொரு அலை சுதா்சனை கடலில் இழுத்து சென்றது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.

தகவலறிந்த மெரீனா போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து சுதா்சனை தேடினா். இந்த நிலையில் சுதா்சனின் உடல் துறைமுகம் பகுதியின் பின்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. உடலை மீட்ட போலீஸாா் உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.