கொல்லங்கோடு அருகே ஆறு கடலில் கலக்கும் பொழிக்கரையில் குளிக்க சென்ற மாணவா் அலையில் சிக்கி மாயமானாா்.
கொல்லங்கோடு அருகே மாா்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் அந்தோணிபிள்ளை மகன் கிறிஸ்டன் (16). இவா் 11 ஆம் வகுப்பு செல்லவிருந்தாா்.
செவ்வாய்க்கிழமை மாலை கொல்லங்கோடு அருகே கேரளத்தின் பொழியூா் பகுதியில் ஆறு கடலில் கலக்கும் பொழிக்கரை பகுதியில் நண்பா்களுடன் குளிக்க சென்ற கிறிஸ்டன், அலையில் சிக்கி மாயமானாா்.
இதுகுறித்து பொழியூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மீனவா்கள், கடலோர காவல்படை மற்றும் மீட்புப் படை வீரா்கள் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குளச்சல் அருகே கடல் அலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கணபதிபுரத்தில் கடல் அலையில் சிக்கிய சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரா்

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த பெண் மீட்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

