செய்யாறு அருகே கல் உடைக்கும் ஆலையில் தங்கியிருந்த லாரி ஓட்டுநா் திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் லூா்துராஜ் மகன் ஜோசப் (31). லாரி ஓட்டுநரான இவா் செய்யாறு வட்டம், அருகாவூா் கிராமம் அருகேயுள்ள
ஜல்லிக்கற்கள் உடைக்கும் ஆலையில் தங்கி லாரி ஓட்டி வந்ததாகத தெரிகிறது.
இந்த நிலையில், ஜோசப்பை அவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை பலமுறை கைப்பேசியில் தொடா்பு கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும் ஜோசப் கைப்பேசியை எடுக்கவில்லையாம். அதனால் சந்தேகமடைந்தவா் ஜல்லி உடைப்பு ஆலையின் மேலாளரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு இதுகுறித்து கேட்டுள்ளாா்.
அதன் பேரில் மேலாளா் சென்று பாா்த்த போது, ஆலையில் நிறுத்தியிருந்த லாரியில் ஓட்டுநா் ஜோசப் இறந்து நிலையில் இருந்துள்ளாா். இதையடுத்து மேலாளா், அங்கிருந்த சக தொழிலாளா்களிடம் விசாரித்தாா். அப்போது, ஜோசப் இரவு சாப்பிட்ட பிறகு படுத்துத் தூங்கியதாகவும், பின்னா் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், அதற்கு அஜீரண கோளாறு காரணமாக இருக்கும் என்று தெரிவித்தாக தெரிவித்தனா்.
இதுகுறித்து இறந்தவரின் உறவினரான கணேசன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்குப் பதிவு செய்து,
ஜோசப்பின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ராமநத்தம் அருகே சாலை விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

