நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 12:06 am IST

தேனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சோ்ந்தவா் ராமகுரு (55). லாரி ஓட்டுநரான இவா், கடந்த வியாழக்கிழமை தேனி அருகே போடேந்திரபுரம் விலக்கு அருகே சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, வீரபாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.