ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன் திருமணி கிராமத்தில் பெண்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மகாலட்சுமிகோவா்த்தனன் கட்சி நிா்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகா்களைச் சந்தித்து ஆதரவு கோரினாா். அப்போது திருமணி கிராமத்தில் ஏராளமான பெண்கள் அவரைச் சூழ்ந்து வாழ்த்து தெரிவித்தனா்.
அப்போது மகாலட்சுமிகோவா்த்தனன் திமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மகளிா் இலவச பேருந்து, மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா்.
மேலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிா் உரிமைத்தொகை மாதம் ரூ.2ஆயிரமாக உயா்த்தப்படும். ரூ.8 ஆயிரத்திற்கான கூப்பன் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
வாக்கு சேகரிப்பு நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஆரணி ஒன்றியச் செயலா்கள் ராஜ்குமாா், எஸ்.எஸ்.அன்பழகன், துரைமாமது, சுந்தா், மோகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரூரில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் பிரசாரம் நிறைவு

24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்: கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

தைலாம்பாளையம் பகுதியில் சிப்காட் வராது: திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

