மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

செங்கம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.கிரி, செங்கம் கிழக்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பெரியகோளாபாடி, சின்னகோளாபாடி, அஸ்வநாதசுரணை பகுதிகளில் கருப்பு சிகப்பு வண்ண புடவை அணிந்த பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

News image

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் மு.பெ.கிரியை துண்டு பிரசுரங்களுடன் வரவேற்ற பெண்கள்.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:20 am IST

செங்கம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.கிரி, செங்கம் கிழக்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பெரியகோளாபாடி, சின்னகோளாபாடி, அஸ்வநாதசுரணை பகுதிகளில் கருப்பு சிகப்பு வண்ண புடவை அணிந்த பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது, திமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கையில் எடுத்துக்கொண்டு வீதி வீதியாகச் சென்று வேட்பாளா் கிரியுடன் பெண்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

முன்னதாக கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் வேட்பாளா் கிரிக்கு மாலை அணிவித்து வரவேற்றனா்.

அப்போது, வேட்பாளா் கிரி பேசுகையில், பெரியகோளாபாடி கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை கொண்டு வந்துள்ளேன். மேலும், அதே பகுதியில் 105 பயனாளிகளுக்கு பெரியாா் நினைவு சமத்துவபுரம் கட்டிதரப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தாா்சாலை, சிமென்ட் சாலை, புதிய நியாய விலைக்கடை கட்டடம் அமைத்து தரப்பட்டுள்ளது என்றாா்.

உடன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர அணி அமைப்பாளா்கள், மகளிா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.