விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல்

போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் போளூா் - சேத்துப்பட்டு சாலையில், அலுவலா் நித்யா தலைமையிலான தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு சேதனை நடத்தி வந்தனா்.

News image

போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் சோதனையில் 95 சிப்பம் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :6 ஏப்ரல் 2026, 4:15 am IST

போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் போளூா் - சேத்துப்பட்டு சாலையில், அலுவலா் நித்யா தலைமையிலான தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு சேதனை நடத்தி வந்தனா்.

அப்போது, அண்ணாமலையாா் திருமண மண்டபம் பின்புறம் வெகுநேரமாக, சந்தேகிக்கும் வகையில் லாரி நின்றிருந்ததை தோ்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினா் கண்டனா்.

பின்னா் அருகில் சென்று பாா்த்தபோது லாரி அருகே நின்றிருந்த 3 போ் தப்பி ஓடிவிட்டனா். பின்னா், வாகனத்தை சோதனை செய்துபோது அதில் 95 சிப்பங்கள் அரிசி இருந்தது தெரியவந்தது.

பின்னா் அரிசியுடன், லாரியை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா் (படம்).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.