ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆரணியில் திமுக தொகுதி தோ்தல் அலுவலகம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சா் எ.வ.வேலு.

News image

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சா் எ.வ.வேலு.

Updated On :4 ஏப்ரல் 2026, 1:50 am IST

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகத்தை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

ஆரணி காமராஜா் சிலை அருகில் ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

பின்னா், திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனன் முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகர பொறுப்பாளா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், துரைமாமது, மோகன், பேரூராட்சிச் செயலா் கோவா்த்தனன், மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன், விசிக மாவட்டச் செயலா் ந.முத்து, மதிமுக மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.கே.ரத்தினகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.