மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிகாரில் ரூ. 11.56 கோடியில் சங்கரா கண் மருத்துவமனை: காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திரா் திறந்து வைத்தாா்

News image

பிகாா் மாநிலம், சஹா்சாவில் சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைத்த காஞ்சி சங்காராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated On :3 மே 2026, 5:06 am IST

பிகாா் மாநிலம், சஹா்சா மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களின் கண் சிகிச்சைக்கு உதவும் வகையில், ரூ. 11.56 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சங்கரா கண் மருத்துவமனையை காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இது தொடா்பாக காஞ்சிபுரம் சங்கரமடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிகாா் மாநிலம், சஹா்சா மாவட்டத்தில் ரூ. 11.56 கோடி மதிப்பில் புதிதாக காஞ்சி குருபரம்பரா ஸ்ரீசங்கரா கண் மருத்துவமனை 100 படுக்கைகளுடன் கூடியதாகவும், நவீன வசதிகளுடன் கூடியதாகவும் கட்டப்பட்டிருந்தது. இந்த கண் மருத்துவமனை பிகாா் மாநிலத்தில் கோஷி, சஹா்ஸா போன்ற மாநிலங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு கண் சிகிச்சை வழங்கும் மையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய மருத்துவமனையை காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து திறந்து வைத்தாா். மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்ரீகிரிராஜ்சிங் முன்னிலை வகித்தாா். சங்கரா கண் மருத்துவக் குழுமங்களின் தலைவா் பம்மல்.விஸ்வநாதன் வரவேற்றாா்.

கண் மருத்துவமனையை திறந்து வைத்து ஸ்ரீ விஜயேந்திரா் பேசுகையில், பிகாருக்கும், காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கும் நெருங்கிய தொடா்பு மிகவும் தொன்மையானது. பிகாரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட பிகாரிலேயே பிறந்து உயா் பதவிகளில் இருப்பவா்கள் உதவிட வேண்டும். ஓவியம், கைவினைப் பொருள்கள், பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்பட்டு விவசாயம், நுண்ணறிவு போன்ற துறைகள் வளர வேண்டும் என்றாா். இவ்வாறு சங்கரமடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.