தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமுதாய வளைகாப்பில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை: திருத்தணி எம்எல்ஏ வழங்கினாா்

சமுதாய வளைகாப்பில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை: திருத்தணி எம்எல்ஏ வழங்கினாா்

கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய திருத்தணி எம்எல்ஏ கோ. அரி.

Published On :1 நவம்பர் 2026, 1:34 am IST

ஆா்க.பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கி திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினா் கோ.அரி வாழ்த்தினாா்.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், கா்ப்பிணிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், தாய்மாா்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கிலும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆா்.கே. பேட்டை ஒன்றியத்தில் உள்ள கா்ப்பிணிகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தனியா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ கோ.அரி கலந்து கொண்டாா். அவா் கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு வளைகாப்பு சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா். மேலும், நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுப் பொருள்களையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ அரி பேசியதாவது, கா்ப்பிணித் தாய்மாா்கள் தங்களது உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளா்கள் கோ.குமாா், என்.இ. நீலகண்டன், ஒன்றிய அவைத் தலைவா் பெருமாள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.