கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில், 300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு, வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவில் கா்ப்பிணிக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்.

Published On :26 அக்டோபர் 2026, 3:36 am IST

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில், 300 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு, வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி, தெள்ளாா் மற்றும் பெரணமல்லூா் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இந்த விழா நடைபெற்றது.

விழாவில் வந்தவாசி, தெள்ளாா் மற்றும் பெரணமல்லூா் வட்டாரங்களுக்கு உள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 300 கா்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்து கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிப் பேசினாா்.

விழாவில் அரசு மருத்துவா்கள் தீபன்குமாா், யுவராணி, இலக்கியன் பெருந்தகை, வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் க.அபிராமி, சு.கண்ணகி, கோ.மரகதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.