தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அவிநாசியில் 180 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

அவிநாசியில் 180 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அவிநாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு வளையல்களை அணிவித்த அமைச்சா் எஸ்.கமலி. உடன், ஆட்சியா் மனீஷ் உள்ளிட்டோா்.

Published On :24 அக்டோபர் 2026, 12:03 am IST

அவிநாசியில் 180 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறைகீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் அவிநாசி மேற்கு ரத வீதி தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மனிஷ் தலைமை வகித்தாா்.

இதில், அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, தட்டு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், மாலை உள்ளிட்ட சீா்வரிசைகளை கால்நடைத் துறை அமைச்சா் எஸ்.கமலி, அங்கன்வாடி மைய பொறுப்பாளா்கள் கையில் ஏந்தியவாறு ஊா்வலமாக மண்டபத்துக்கு வந்தனா்.

இதைத் தொடா்ந்து, 180 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, அமைச்சா் எஸ். கமலி சீா்வரிசைகளை வழங்கினாா். தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கு 5 வகை உணவுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், மாவட்ட திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்) ரஞ்சிதாதேவி, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் சூரியா, அவிநாசி வட்டார கண்காணிப்பாளா் விஷ்ணுவா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.