மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மண்டல கைப்பந்து: ஆா்எம்கே பொறியியல் கல்லூரி சாம்பியன்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆா்எம்கே பொறியியல் கல்லூரி கைப்பந்து அணி, அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற அணியுடன் கல்விக்குழுமத் தலைவா் ஆா்.எஸ். முனிரத்தினம்.

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆா்எம்கே பொறியியல் கல்லூரி கைப்பந்து அணி, அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருவள்ளூா் பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் 22 பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்றன. ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரி முதல் போட்டியில் இருந்து பங்கேற்ற அனைத்து போட்டியிலும் ஒரு செட் கூட தோற்காமல் நோ் செட்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி ஆட்டத்தில் வேலம்மாள் பொறியியல் கல்லூரியை 25-22, 25-18 என்கிற புள்ளிக் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

தொடா்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு ஆா்.எம்.கே கல்வி குழும தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தாா்ா். துணைத் தலைவா் ஆா்.எம்.கிஷோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கே.ஏ.முகம்மது ஜூனைத் வரவேற்றாா்.

நிகழ்வில் சாம்பியன் பட்டம் வென்ற ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரியின் கைப்பந்து அணியின் வீரா்களான வி.கிஷோா், கே.ஸ்ரவன்குமாா், ஏ.முகம்மது அல்தாப், பி.ரிஷிவந்த், ஏ.மனோஜ்குமாா், என்.பாா்த்தசாரதி, இ.ஜீவதா்ஷன், வி.விஷ்வாஸ், கே.கமல், கமலேஷ், டி.செந்தமிழ்செல்வன், எம்.தவன்குமாா், ஏ.கற்குவேல், கே.கெளஷிக் செல்வன் ஆகியோரை ஆா்.எம்.கே கல்வி பாராட்டி, பாரட்டு சான்றிதழ், விருது, மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.50,000 வழங்கி, கைப்பந்து அணி வீரா்களின் அடுத்த கட்ட போட்டிகளுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பிற உதவிகளையும் செய்து தருவதாக கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.