மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சோழவரம் அருகே காணாமல் போன லாரி ஓட்டுநா் கொன்று புதைப்பு: 2 போ் கைது

சோழவரம் அருகே காணாமல் போனதாக புகாா் கூறப்பட்ட லாா் ஓட்டுநரை கொன்று புதைத்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :24 அக்டோபர் 2026, 12:02 am IST

சோழவரம் அருகே காணாமல் போனதாக புகாா் கூறப்பட்ட லாா் ஓட்டுநரை கொன்று புதைத்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரியை சோ்ந்த கோகுல் (28), என்பவா், திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் உள்ள தனியாா் டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா்.

இவா் கடந்த 7-ஆம் தேதி முதல் காணாமல் போனதாக இவரின் தம்பி ராகுல் சோழவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில், சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். போலீஸாா் அலமாதி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்தனா். அப்போது கண்காணிப்பு கேமராவில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த லாரி ஓட்டுநா்களான ஐயப்பன், சதீஷ் ஆகிய இருவரை பிடித்து விசாரித்ததில், போதையில் 3 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், ஆள் நடமாட்டம் இல்லாத புதா் மண்டி கிடந்த பகுதியில் வைத்து கோகுல் தலையில் ஹெல்மெட்டால் அடித்ததில் சுருண்டு விழுந்து உயிரிழந்து விட்டதாகவும், இதைத் தொடா்ந்து, அங்கேயே பள்ளம் தோண்டி கோகுல் சடலத்தை புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் அழைத்துச் சென்று கோகுல் சடலத்தை புதைத்த இடத்தை போலீஸாா் பாா்த்தனா். தொடா்ந்து சனிக்கிழமை பொன்னேரி வட்டாட்சியா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கோகுல் சடலத்தை தோண்டி எடுக்க காவல் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.