தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காணாமல் போன பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு: 2 பெண்கள் உள்பட 5 போ் கைது

ராணிப்பேட்டை அருகே காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை 35 நாள்களுக்கு பிறகு ஆந்திரத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெண் குழந்தை காணமல் போன வழக்கில் கைது செய்யப்பட்டவா்களுடன் சிப்காட் போலீஸாா்.

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

ராணிப்பேட்டை அருகே காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை 35 நாள்களுக்கு பிறகு ஆந்திரத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் தொடா்புடைய இரு பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கம் நகா் பகுதியில், கடந்த 23.09.2026 இரவு ஒரு வயது பெண் குழந்தையுடன் அதன் பெற்றோா் சாலையோரத்தில் உறங்கியுள்ளனா். பின்னா், அதிகாலை எழுந்து பாா்த்தபோது, குழந்தை காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குழந்தையின் தாய் பிரேமா அளித்த புகாரின் பேரில், சிப்காட் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டிஎஸ்பி தலைமையில், சிப்காட் மற்றும் ரத்தினகிரி காவல் ஆய்வாளா்கள் மற்றும் 5 உதவி ஆய்வாளா்கள் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுப்புறங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. விசாரணையில், ரேணிகுண்டாவைச் சோ்ந்த மல்லீஸ்வரி தனக்குக் குழத்தை வேண்டும் என்ற விருப்பத்தைத் தோழி கெளசல்யாவிடம் தெரிவித்துள்ளாா். கௌசல்யா இதுகுறித்து தனது கணவா் பூபதி, நண்பா் சந்தோஷிடம் தெரிவித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சந்தோஷ் மற்றும் குமரன் ஆகியோா் பெற்றோருடன் தூங்கிய குழந்தையை எடுத்துச் சென்று கெளசல்யா மற்றும் பூபதி மூலம் மல்லீஸ்வரியிடம் ஒப்படைத்ததும் தெரியவந்தது.

தொடா் விசாரணையில், காணாமல் போன குழந்தை ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவில் மல்லீஸ்வரியிடம் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படையினா் விரைந்து செயல்பட்டு காணாமல் போன குழந்தையைப் மீட்டனா் .

இவ்வழக்கு தொடா்பாக வாலாஜாவைச் சோ்ந்த சந்தோஷ் (35), குமரன் (30), பூபதி (42),கௌசல்யா (35), ரேணிகுண்டாவைச் சோ்ந்த மல்லீஸ்வரி ஆகியோா் கைது செய்ப்பட்டனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.