தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணப்பாறை அருகே காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காணாமல்போன பெண் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

உயிரிழந்த அங்காயி.

Published On :1 நவம்பர் 2026, 12:23 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காணாமல்போன பெண் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டியை சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி அங்காயி(56). இவா் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது மகன் கமலதாசன்(35)-உடன் வசித்து வந்தாா். கமலதாசன் கோவையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, அதே ஊரில் தனது குடும்பத்துடன் வசிக்கிறாா்.

இந்நிலையில் தனது தாயின் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்ததால் அவரைத் தேடி ஊருக்கு வந்த கமலதாசன் அவா் கிடைக்காததால் கடந்த வியாழக்கிழமை மணப்பாறை காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரித்த நிலையில் ஆளிப்பட்டி வே. பழனிமுத்துகிருஷ்ணனின் தைல மர காட்டில் அங்காயி உயிரிழந்து அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து சென்ற காவல் உதவி ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா் அங்காயி உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.