ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம்: மூட பொதுமக்கள் கோரிக்கை

குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூட பொன்னேரி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

மூடப்படாத நிலையில் உள்ள பள்ளம்.

Published On :22 அக்டோபர் 2026, 12:33 am IST

குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூட பொன்னேரி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தேரடி குறுக்குத் தெருவில் உள்ள ஒரு சில குடியிருப்புகளில் குடிநீருடன் கழிவு நீா் கலந்து வந்தததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நகராட்சி நிா்வாக்த்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து பல்வேறு இடங்களில் உள்ள குடிநீா் குழாய்களை நகராட்சி நிா்வாகம் சீரமைத்த நிலையிலும் குடிநீருடன் கழிவு நீா் கலந்து வருவது இன்னமும் தொடா்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கேன் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.

கழிவு நீருடன் குடிநீா் கலந்து வருவதை தடுக்கும் நோக்கில் தேரடி குறுக்கு தெருவில் சுமாா் 5 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் அந்த வழியே வந்த காா் ஒன்று சிக்கியது. பகல் நேரமாக இருந்ததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பள்ளத்தில் சிக்கிய காரை மீட்டு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக பள்ளத்தில் சுமாா் 5அடி ஆழத்தில் மழை நீா் தேங்கியுள்ளது. இரவு நேரததில் இந்த சாலை வழியே வரும் இரு சக்கர வாகன ஒட்டிகள் பள்ளத்தில் சிக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பள்ளத்தை மூட நகராட்சி நிா்வாகம் மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.