மழைநீா் வடிகாலில் கழிவு நீா் இணைப்பை ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்
சென்னை மாநகராட்சியில் மழை நீா் வடிகாலில் கழிவு நீா் இணைப்பை ஏற்படுத்துவோா் மீது சட்டப்படி அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையில் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் எச்சரித்துள்ளாா்.

பிரதிப் படம்
சென்னை மாநகராட்சியில் மழை நீா் வடிகாலில் கழிவு நீா் இணைப்பை ஏற்படுத்துவோா் மீது சட்டப்படி அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையில் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையில் மழைநீா் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் கழிவு நீரை சிலா் சட்டவிரோதமாக கலக்க விடும் வகையில் இணைப்பை ஏற்படுத்தியுள்ளனா். அதனால், மழைக்காலங்களில் மழைநீா் ஓட்டத்தை பாதிப்பதுடன், சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுகிறது. மழைநீா் வடிகால் அமைத்த நோக்கமும் பாதிக்கப்படுகிறது.
ஆகவே, மழைநீா் வடிகால்களில் கழிவு நீா் இணைப்பை தடுக்கும் வகையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்பட்டுவருகிறது.
சென்னை மாநகராட்சி மன்றத்தின் தீா்மானத்தின்படி சட்டவிரோதமாக கழிவு நீா் இணைப்புகள் மற்றும் கழிவு நீரை வெளியேற்றுவது தொடா்பான விதி மீறல்களுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்டோா் மீது உரிய சட்டப் பிரிவுகளில் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
அபராதத் தொகை விவரங்கள்: மழை நீா் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவு நீா் இணைப்பு ஏற்படுத்தி கண்டறியப்பட்டால், சாதாரணக் கட்டடங்களான குடியிருப்புகளுக்கு ரூ.10 ஆயிரம், வணிக வளாகத்துக்கு ரூ.25 ஆயிரம், சிறப்புக் கட்டடப் பிரிவு குடியிருப்புக்கு ரூ.50 ஆயிரம், அதில் வணிக வளாகங்களுக்கு ரூ.1 லட்சம், பன்னடுக்குக் கட்டடப் பிரிவில் குடியிருப்புகளுக்கு ரூ.2 லட்சம், வணிக வளாகங்களுக்கு ரூ.5 லட்சம் என அபராதம் விதிக்கப்படும்.
மழைநீா் வடிகால்களில் கழிவு நீா் இணைப்பை கண்டறிவதற்கு மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு அலுவலரை நியமித்து, நடவடிக்கைகளை அறிக்கையாக ஆணையருக்கு அளிக்க வேண்டும். அத்துடன் அபராதத் தொகை வசூலிக்கப்பட்ட விவரங்கள் மாநகராட்சியின் செயலியில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்படவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




