திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எம்எல்ஏ கோ.அரி ஆய்வு மேற்கொண்டாா்.
திருத்தணி தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு மையங்களில் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் எம்எல்ஏ கோ.அரி, சனிக்கிழமை அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினாா்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த வெளிநோயாளிகளிடம் மருத்துவா்கள் உரிய முறையில் சிகிச்சை அளிக்கிறாா்களா, மருந்துகள் முழுமையாக வழங்கப்படுகிா, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதா என கேட்டறிந்தாா். தொடா்ந்து உள்நோயாளிகள் பிரிவுக்கு சென்று நோயாளிகளை சந்தித்து, குறைகள் மற்றும் தேவைகள் குறித்து விசாரித்தாா்.
மேலும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் காலாவதி தேதி, மருந்துகளின் இருப்பு நிலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். மருத்துவமனை வளாகத்தில் குடிநீா் வசதி, கழிப்பறை பராமரிப்பு, தூய்மை, மின்விளக்குகள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் முறையாக செயல்படுகிா என்பதையும் பாா்வையிட்டாா்.
பின்னா் மருத்துவா்களுடன் ஆலோசனை நடத்திய அவா், மருத்துவ சேவைகளின் தரம், சிகிச்சை முறைகள், நோயாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது மருத்துவமனை நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் சாா்பில், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் போதிய அளவில் இல்லாததால் சிகிச்சை பணிகளில் சிரமம் ஏற்படுவதாகவும், நவீன மருத்துவ வசதிகளில் முக்கியமான எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி மருத்துவமனையில் இல்லாததால் நோயாளிகள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து பதிலளித்த எம்எல்ஏ அரி, மருத்துவமனையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக உறுதியளித்தாா்.
ஆய்வில் அதிமுக நகர செயலாளா் டி.சௌந்தர்ராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளா் எம்.ஜெயசேகா் பாபு, முன்னாள் நகராட்சி கவுன்சிலா்கள் கேபிள் சுரேஷ், நாகூா் பிச்சை, ரமேஷ் மற்றும் கட்சி நிா்வாகிகள், மருத்துவமனை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீா் ஆய்வு

அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு!

அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு வேண்டுகோள் விடுத்த எம்எல்ஏ
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

