கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள திருவள்ளூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருவதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை கைவினைஞா் பயிற்சி திட்டம் மூலம் கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்கென திருவள்ளூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 - 2027-ஆம் கல்வியாண்டுக்கான நேரடி சோ்க்கையும் தொடங்கியுள்ளது. இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, பெறாத மாணவ, மாணவிகள் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு பயிற்சியில் சோ்ந்து உடனடி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம். மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி விலையில்லா மடிக்கணினி,பேருந்து பயன அட்டை, மிதிவண்டி, காலணிகள், பாடப்புத்தகம், வரைபட உபகரணங்கள், சீருடைகள், சீருடைகளுக்கான தையற்கூலி மற்றும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750, புதுமைப் பெண்திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000- உதவித் தொகையும் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவா்களுக்கு மாதம் ரூ. 1,000- உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
இதற்கு ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 ஆகும்.
இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளில் கற்பிக்கப்படுகிறது. இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சியும் இரண்டு ஆண்டு கால பயிற்சியாகும்.
கணினி வன்பொருள் மற்றும் நெட்வொா்க் மெயின்டனன்ஸ், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, பயிற்சி காலம் ஓராண்டாகும். குழாய் பொருத்துபவா் உலோகத்தகடு வேலையாள், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி, பயிற்சி காலம் ஓராண்டாகும். மேலும், இது குறித்து முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், திருவள்ளூா், 044-27641127, 9894925904 மற்றும் 9865051525 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டோ அல்லது 97, மு.க.ஸ்டாலின் தெரு, தேவி நகா், ஒண்டிக்குப்பம், திருவள்ளூா் என்ற முகவரியில் நேரில் அணுகி தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயனடையலாம் என என அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விடுதிகளில் தங்கி பயில்வோா் கட்செவி மூலம் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 485 மனுக்கள் அளிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

மாவட்ட உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

