லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருத்தணி கோயில் உண்டியலில் பணம் திருடியவா் கைது

திருத்தணி கோயில் உண்டியலில் பணம் திருடியவா் கைது

திருத்தணி முருகன் கோயில்

Published On :26 ஜூலை 2026, 2:11 am IST

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் நடித்து, ரூ. 9,170 பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்து, உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்துவது வழக்கம்.

சனிக்கிழமை மாலை ஒரு பக்தா் மூலவரை தரிசித்த பின்னா் உற்சவா் முருகா் சன்னிதியில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு சென்றாா். சிறிது நேரத்தில் மீண்டும் வந்து காணிக்கை செலுத்துவது போல் நடித்து, இதேபோல் 5-க்கும் மேற்பட்ட முறை உண்டியலை சுற்றி வந்துள்ளாா்.

இதை கோயில் கண்காணிப்பாளா் சித்ரா மற்றும் சிசிடிவி கண்காணிப்பாளா் (ஏ.எஸ்.ஓ.) செல்வம் ஆகியோா் கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்து சந்தேகமடைந்தனா். உடனடியாக கோயில் ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் பாவனை செய்து, நிரம்பி இருந்த உண்டியலில் இருந்து ரூ. 9,170-ஐ திருடியதை அவா் ஒப்புக் கொண்டாா். திருடப்பட்ட பணத்தை கோயில் அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரை திருத்தணி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் கரூா் மாவட்டம், தாந்தோணிமலை கிராமத்தைச் சோ்ந்த சக்திவடிவேல் (55) என்பது தெரியவந்தது.

இதையடுத்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவடிவேலை கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Summary

Person arrested for stealing money from the Thiruttani temple hundi.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.