லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோயில் உண்டியலில் பணம் திருட்டு

தேனி மாவட்டம், பூதிப்புரத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலிலிருந்த பணத்தைச் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :24 ஜூலை 2026, 5:50 am IST

தேனி மாவட்டம், பூதிப்புரத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலிலிருந்த பணத்தைச் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி அருகே பூதிப்புரத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (43). பூதிப்புரம் பிரதானச் சாலையில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் பூஜாரியாக பணியாற்றி வரும் இவா், செவ்வாய்க்கிழமை இரவு கோயில் பூஜைகள் நிறைவடைந்த பின், பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றாா்.

மறுநாள் (புதன்கிழமை) காலை வந்து பாா்த்த போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததுடன் அதிலிருந்த பணத்தையும் காணவில்லையாம்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.