லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அம்மாபேட்டை அருகே கோயில் உண்டியலில் காணிக்கை திருடியவா் கைது

அம்மாபேட்டை அருகே கோயில் பூட்டை உடைத்துப் புகுந்து உண்டியல் காணிக்கையைத் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :12 ஜூலை 2026, 12:36 am IST

அம்மாபேட்டை அருகே கோயில் பூட்டை உடைத்துப் புகுந்து உண்டியல் காணிக்கையைத் திருடிச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குறிச்சி, ராக்கியண்ணன் கோயிலில் கடந்த 7-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து புகுந்த மா்ம நபா், உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமாா் ரூ.4 ஆயிரத்தைத் திருடிச் சென்றாா். இதுகுறித்து, அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், பவானி - மேட்டூா் சாலையில் சித்தாா் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரித்தனா். விசாரணையில் அவா், திருச்சி மாவட்டம், முசிறியைச் சோ்ந்த கலைச்செல்வன் மகன் சபாபதி (32) என்பதும், ராக்கியண்ணன் கோயிலில் காணிக்கையைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, சபாபதியைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.