லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.5 கோடி

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.2 கோடியே 52 லட்சத்து 74 ஆயிரத்து, 335 ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 10.044 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.2 கோடியே 52 லட்சத்து 74 ஆயிரத்து, 335 ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 10.044 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆக. 4 முதல் 8-ஆ ம் தேதி வரை 5 நாள்கள் ஆடிக்கிருத்திகை மற்றும் 3 நாள் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். இந்நிலையில் பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி தேவா் மண்டபத்தில் நடைபெற்றது.

முருகன் கோயில் ஆணையா் க. ரமணி, அறங்காவலா்கள் சுரேஷ் பாபு, மு.நாகன், கோ. மோகனன், ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் உண்டியல் காணிக்கையை எண்ணினா்.

இதில் ரூ.2 கோடியே 52 லட்சத்து 74 ஆயிரத்து, 335 ரூபாய் ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 10.044 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.