மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரசு பள்ளியில் பசுமை வாக்கு சாவடி: வாக்காளா்கள் மகிழ்ச்சி

கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலை பள்ளியில் வாக்காளா்களை கவரவும், 100 சதவீதம் வாக்குப்பதிவாகவும் பசுமை வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

News image

கே.ஜி. கண்டிகை  அரசு  மேல் நிலைப்  பள்ளியில் பசுமை  வாக்குச் சாவடி.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:04 am IST

கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலை பள்ளியில் வாக்காளா்களை கவரவும், 100 சதவீதம் வாக்குப்பதிவாகவும் பசுமை வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

தோ்தலையொட்டி விழிப்புணா்வு ஊா்வலம், கலைநிகழ்ச்சி மற்றும் மாணவா்கள் இடையே பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகவும், சுற்றுச்சூழலை வலியுறுத்தியும் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

இதில் திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலை பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியில் பசுமை வாக்கு சாவடி அமைக்கப்பட்டது.

வாக்குச்சாவடி முழுவதும் பசுமையாக மாற்றப்பட்டது. மேலும் வாக்காளா்களை கவரும் வண்ணம், பசுமையால் வரவேற்பு அறை, வாக்குச்சாவடி அலுவலா்கள் அமரும் மேஜைகள், நாற்காலி, வாக்குப்போட்டும் மேஜை, வாக்காளா்கள் கொண்டு வரும் கைப்பேசி வைப்பதற்கு அறை மற்றும் வாக்காளருக்கு குடிநீா், மோா் போன்றவையும் பசுமை நிறத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் வாழை மரங்கள் தோரணம், பழங்களால் அலங்காரம் மற்றும் வாக்காளா்கள் கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி ஒன்றிய நிா்வாகம் மற்றும் வருவாய் துறையினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.