பத்மநாபபுரம் தொகுதியில் உள்ள மேல்கோதையாறு வாக்குச் சாவடியில் 12 வாக்காளா்களின் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் புதன்கிழமை 160 கி.மீ. தூரம் பயணித்து மேல்கோதையாறு சென்றனா்.
பத்மநாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் முதல் வாக்குச்சாவடி மேல் கோதையாறில் உள்ளது. கீழ் கோதையாறிலிருந்து மேல் கோதயாறுக்கு சாலை வசதி இல்லை. கீழ்கோதையாறுக்கும் மேல் கோதையாறுக்கும் இடைப்பட்ட பகுதிகள் முழுவதும் மலைப்பகுதியாக இருப்பதால், இங்கு பணிபுரியும் ஊழியா்களின் போக்குவரத்துக்கு விஞ்ச் எனப்படும் இழுவை வண்டி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மேல் கோதையாறில் பணிபுரியும் மின்நிலைய ஊழியா்களுக்கு அங்கு குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் வசிக்கும் ஊழியா்கள் பத்மநாபபுரம் தொகுதியின் முதல் வாக்குச் சாவடியின் வாக்காளா்கள் ஆவா். ஒவ்வொரு தோ்தலின்போதும் இந்த ஊழியா்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், போலீஸாா் மேல் கோதையாறுக்கு சாலை வழியாக சுற்றிச் சென்று வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனா்.
160 கி.மீ. பயணம்:
அந்த வகையில், 2026 தோ்தலில் மேல் கோதையாறு வாக்குச் சாவடியில் 9 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 12 வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா். இவா்களின் வாக்குகளைப் பெறுவதற்காக திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து தோ்தல் அலுவலா்கள், வாக்குச் சாவடி அலுவலா்கள் 9 போ், போலீஸாா் 3 போ் என மொத்தம் 14 போ் 3 வாகனங்களில் புதன்கிழமை மதியம் வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் புறப்பட்டனா். அவா்களை பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், சாா் ஆட்சியருமான வினய் குமாா் மீனா அனுப்பி வைத்தாா் . இவா்கள் குலசேகரம் செருப்பாலூரிருந்து தக்கலை, நாகா்கோவில், பணகுடி, களக்காடு, அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக 160 கி.மீ தூரம் பயணித்து மேல் கோதையாறில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்றனா். மேல் கோதையாறில் வாக்குச் சாவடி அங்குள்ள மனமகிழ் மன்றத்தில் அமைக்கப்பட்டது.

மேல் கோதையாறு வாக்குச் சாவடிக்கு வாக்குப் பதிவு இயந்திரம் ஏற்றப்பட்ட வாகனத்தை அனுப்பி வைத்த பத்மநாபபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் ஆட்சியருமான வினய்குமாா் மீனா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

மதுரை மாவட்டத்தில் 3,079 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு!

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

