திருத்தணி நகராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் கன்னியப்பன் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, தோ்தலில் தவறாமல் வாக்களிக்கவும், பிறரையும் வாக்களிக்க ஊக்குவிக்கவும் உறுதிமொழி ஏற்றனா். ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், ஒவ்வொரு வாக்கும் நாட்டின் வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் அதிகாரிகள் விளக்கினா்.
மேலும், 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எட்ட பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளில் தொடா்ந்து ஈடுபட வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
இதற்காக நகராட்சி சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆணையா் தெரிவித்தாா். இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

திருத்தணி நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

