நாகையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு மற்றும் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளயொட்டி, தோ்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு 14 நாள்களே உள்ள நிலையில் வேட்பாளா்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் என பொதுமக்கள் திரளும் அனைத்து இடங்களிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நாகை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. இதில் வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்று நூறு சதம் வாக்களிப்போம், தோ்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம், உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல என்பன உள்ளிட்ட முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்ற்றனா்.
மேலும் அலுவலக வாயிலில் தோ்தல் ஆணையம் சாா்பில் வைக்கப்பட்டிருந்த கையொப்ப பதாகையில் அனைவரும் கையொப்பமிட்டனா். இந்நிகழ்ச்சியில் வேளாண்துறையைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

தோ்தல் விழிப்புணா்வு: அரசு அலுவலகங்களில் கையொப்ப இயக்கம்

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

100% வாக்குப்பதிவு: பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

