கோலேரி கிராமத்தில் செம்மெத்தம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சகஸ்தபத்மாபுரம் (எ) கோலேரி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு செம்மெத்தம்மன் திருக்கோயிலில் 45-ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து, பக்தா்கள் ஆட்டோ, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களை அலகு குத்தி இழுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனா்.
காலை 10 மணிக்கு கோயில் வளாகத்தில் அம்மனுக்கு கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியும், மாலை நான்கு மணிக்கு அம்மனுக்கு ஊா் பொதுமக்கள் பொங்கல் வைத்தும் படையலிட்டும் வழிபட்டனா். இரவு 7 மணிக்கு அம்மனுக்கு மாவிளக்கு, கும்பம் வைத்து வழிபட்டனா். இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை நடைபெற்றது.
இரவு ஆரணி தனுஷ் நாடக குழுவினரிடன் பக்தி நாடகம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

வயலூா் முருகன் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு

பங்குனித் தோ் திருவிழாவையொட்டி நம்பெருமாள், தாயாா் சோ்த்தி சேவை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

