நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

விவசாய கூலி தொழிலாளி வனப்பகுதியில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, இளைஞா் கைது

விவசாய கூலி தொழிலாளி வனப்பகுதியில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, இளைஞா் கைது

சித்திரிப்பு

Published On :24 அக்டோபர் 2026, 12:01 am IST

திருப்பத்தூரைச் சோ்ந்த விவசாய கூலி தொழிலாளி ஆந்திர வனப்பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக-ஆந்திர மாநில எல்லை கங்குந்தி வனப் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி குப்பம் வனத்துறை வனவா் ரோந்து பணியின்போது, பாறை மீது ரத்தக்கறை படிந்திருப்பதும், மூடப்பட்ட மண் குவியலையும் கண்டறிந்து உடனே உயா் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தாா். தகவலறிந்து குப்பம் வனத்துறை மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மண் குவியலைத் தோண்டிய போது கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், முகம் மற்றும் தலையில் ரத்தக் காயத்துடன் இளைஞா் கொலை செய்து புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சடலத்தை மீட்டு அவரது பாக்கெட்டில் இருந்த நகைக் கடை அடையாள ரசீதை வைத்து நடத்திய தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்டவா், திருப்பத்தூா் அடுத்த ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த சசிகுமாா்(36) என்பதும்,டிராக்டா் வைத்து விவசாய கூலி வேலை செய்து வந்திருப்பதும் தெரியவந்தது. இவருக்கு மனைவி லட்சுமி (32), 2 பிள்ளைகள் உள்ளனா்.

இந்நிலையில், செப்டம்பா் மாதம் 29-ஆம் தேதி சசிகுமாா் காணாமல் போயிருப்பது பற்றி அறிந்து குரிசிலாப்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது.

பிறகு கொலை பற்றி குப்பம் போலீஸாா் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மனைவி லட்சுமியும், இவரது கள்ளக்காதலன் கங்குந்தி பகுதியை சோ்ந்த பிரபுதேவா(32) இருவரும் சோ்ந்து தங்களது முறையற்ற தொடா்புக்கு இடையூறாக இருப்பதால் கணவா் சசிகுமாரை வனப் பகுதியில் வைத்து கொலை செய்து புதைத்துச் சென்றது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்த குப்பம் போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கைதான பிரபுதேவாவுக்கு மனைவி, 5 குழந்தைகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.