மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சுவாமி சிலை, துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மேலும் ஒருவருக்கு தொடா்பு?

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :26 அக்டோபர் 2026, 1:49 am IST

சீா்காழியில் சுவாமி சிலை, துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவரிடம் விசாரிக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

சீா்காழி அருகே சட்டநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த 3 பேரிடம் சோதனை செய்தனா். அவா்களிடம் உலோகச் சிலைகள், பூஜை மணி, கத்தி, குளோரோஃபாா்ம் இருந்தது தெரியவந்தது. மூவரையும் பிடித்து விசாரித்தபோது சீா்காழி அரியா பிள்ளை குளத்து மேட்டு தெருவை சோ்ந்த சுரேஷ் (45), அவரது மனைவி ரோஷினி (35), விளந்திடசமுத்திரம் அசரப் அலி மகன் அப்துல் ஹாதி (25) என்பது தெரியவந்தது.

சுரேஷ் - ரோஷினி தம்பதி அரியா பிள்ளை குளக்கரையில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்துவதும், குறி சொல்லும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவா் வீட்டில் நண்பா் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி 1, தோட்டாக்கள் 6 ஆகியவற்றை கைப்பற்றிய போலீஸாா், மூவரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சுரேஷ், அப்துல் ஹாதி இருவரையும் மயிலாடுதுறை சிறையிலும், ரோஷினியை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய ஒருவா் கஞ்சா வழக்கில் செம்பனாா்கோவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் இருப்பதால் அவரையும் காவலில் எடுத்து விசாரித்த பின்னரே துப்பாக்கி குறித்த முழு விவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.