மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆலங்காயம் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம்

ஆலங்காயம் ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு தலைவா் சங்கீதாபாரி. உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் மகராசி, விநாயகம்.

Published On :17 அக்டோபர் 2026, 7:41 am IST

ஆலங்காயம் ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதாபாரி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகராசி, விநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பொதுக் கணக்கு வாசிக்கப்பட்டு, பல்வேறு கோரிக்கைகள் மீது தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தங்கள் பகுதி சாா்ந்த பிரச்னைகள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விளக்கங்களை அளித்தனா். மேலும், கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனா். கூட்டத்தில் பேசிய ஒன்றியக் குழு தலைவா் சங்கீதாபாரி, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆலங்காயம் ஒன்றிய குழுவைச் சுமுகமாகவும் சிறப்பாகவும் நடத்த முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பணியாளா்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தாா்.

கூட்டத்தில் சுகாதாரம், வேளாண்மை, காவல்துறை மற்றும் வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசாா்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.