மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விவசாயத் தொழிலாளா்கள் மனு கொடுக்கும் போராட்டம்

மொடக்குறிச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசிடம் மனு அளிக்கும் விவசாயத் தொழிலாளா்கள்.

Published On :24 அக்டோபர் 2026, 6:00 am IST

மொடக்குறிச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மொடக்குறிச்சி வட்டாரச் செயலாளா் தங்கவேல் தலைமை தாங்கினாா். வட்டாரத் தலைவா் அண்ணாதுரை முன்னிலை வகித்தாா். இதில்

50-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளா்கள் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

100 நாள் வேலை திட்டம் 125 நாள்களாக உயா்த்தப்பட்டும் பணிகள் வழங்கப்படுவதில்லை. இதில் 200 நாள்களுக்கு பணி வழங்குவதுடன், பணியாளா்களுக்கு தினமும் ரூ.700 ஊதியம் வழங்க வேண்டும். மேலும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயராகவன், செயலாளா் முருகேசன், கொடுமுடி ஒன்றியச் செயலாளா் சசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.