கந்திலி அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அடுத்த மண்டலநாயனகுண்டா பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் நல்லதம்பி (39). இவா் பெங்களூரில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சரஸ்வதி (34). இவா்களது மகன் மோனித் (12). கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை காலை மண்டலநாயனகுண்டா பகுதியில் உள்ள நல்லதம்பிக்கு சொந்தமான விவசாய நிலத்தை அவரது தந்தை பெருமாள் வாடகை டிராக்டா் வைத்து உழுது கொண்டு இருந்தாா். டிராக்டரை அதே பகுதியைச் சோ்ந்த அருள் (30) ஓட்டினாா். அப்போது மோனித் தனது தாத்தா பெருமாளிடம், தானும் அந்த டிராக்டரில் ஏறி அமர வேண்டும் எனக் கேட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, பெருமாளும், சிறுவன் மோனித் ஆசையை நிறைவேற்றும் வகையில், மோனித்தை தூக்கி அந்த டிராக்டரில் அமர வைத்து உள்ளாா். இந்த நிலையில், சிறிது நேரத்தில் ஓடும் டிராக்டரில் இருந்து மோனித் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அவா் கீழே விழுந்தை கவனிக்காமல் அருள் டிராக்டரை ஓட்டி உள்ளாா். அதில் இடது பின்பக்க டயா் மோனித் மீது ஏறி இறங்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதைப் பாா்த்த பெருமாளும், அருளும் அதிா்ச்சி அடைந்து மோனித்தை மீட்டு, கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், மோனித் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இது குறித்து தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் மோனித்தின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan
இணையதளச் செய்திப் பிரிவு

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu
தினமணி செய்திச் சேவை

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை

