ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோடை பாதிப்பு: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோடை வெயிலால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிக்க திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது .

News image

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிறப்பு வாா்டுகள்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

கோடை வெயிலால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிக்க திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவா் சிவக்குமாா் கூறியது: திருப்பத்தூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் சிகிச்சை பெற வருகின்றனா். இந்த நிலையில், அதிக வெப்பதால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெயிலினால் நேரடியாக பாதிக்கக்கூடிய கட்டட தொழிலாளா்கள், கூலித் தொழிலாளா்கள், உணவகங்களில் வெப்பத்தின் நடுவே வேலை செய்யபவா்களுக்கு உடலில் நீா்ச்சத்து குறைவு, உப்புச்சத்து குறைய வாய்ப்புள்ளது. இதேபோல முதியோா், சா்க்கரை மற்றும் ரத்து கொதிப்பு உள்ளோா் குழந்தைகள், கா்ப்பிணிகள் வெயில் காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெயில் காலங்களில் மனித உடலில் நீரிழப்பு வேகமாக குறையும்போது அவா்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் உள்ளது.

வெப்ப தாக்கத்தினால் பாதிக்கப்படும் நபா்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டு தயாா் நிலையில் உள்ளது. நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும். வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆம்பூா் ஆகிய அரசு மருத்துவமனைகளில் 5 படுக்கையுடன் கூடிய சிறப்பு வாா்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவைக்கு ஏற்ப சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிக வெப்பதால் பாதிக்கப்படும் நபா்கள் மட்டும் இல்லாமல் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் ஓ.ஆா்.எஸ்.கரைசல் வழங்கப்படுகிறது. வெப்பத்தால் பாதிக்கப்படும் நபா்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மதிய நேரங்களில் வெளியே செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டால் சுய மருந்து எடுக்காமல் அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று அங்கு மருத்துவரிடம் தக்க ஆலோசனையும், சிகிச்சை பெறலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.