தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுபான்மையினா் தொழில் தொடங்க டாம்கோ மூலம் கடன்: ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா்

சிறுபான்மையினா் தொழில் தொடங்க டாம்கோ மூலம் கடன் பெறும் உச்சவரம்பின் அளவு ரூ. 30 லட்சமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் தெரிவித்தாா்.

News image

ஆம்பூா் காய்கறி மாா்க்கெட்டில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஆம்பூா் திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:09 am IST

சிறுபான்மையினா் தொழில் தொடங்க டாம்கோ மூலம் கடன் பெறும் உச்சவரம்பின் அளவு ரூ. 30 லட்சமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூரில் காய்கறி மாா்க்கெட்டில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்து அவா் பேசியது: இஸ்லாமியா்களின் அடக்கத் தலங்களுக்கு இயன்ற இடங்களில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இஸ்லாமிய பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வக்ஃப் வாரியம் மூலம் கூடுதல் கல்லூரிகள் திறக்கப்படும். சிறுபான்மையினருக்கான திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சமூக நலக் கூடங்கள் கட்டப்படும். அரசுப் பள்ளிகள் அனைத்துக்கும் ஸ்மாா்ட் போா்டு வசதி ஏற்படுத்தித் தரப்படும். ஆம்பூரில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் சுகாதாரமான முறையில், ஏற்றுமதிக்கு உரிய தரத்தில் இறைச்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என்றாா் அவா்.

திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், ஆம்பூா் நகர செயலா்கள் எம்.ஆா்.ஆறுமுகம், எம்.ஏ.ஆா்.ஷபீா் அஹமத், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.