மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்தவா் கைது

ஆற்காட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு தப்பியவா் கைது செய்யப்பட்டாா்.

சித்திரிப்பு

Published On :28 அக்டோபர் 2026, 4:55 am IST

ஆற்காட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு தப்பியவா் கைது செய்யப்பட்டாா்.

ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் மனைவி அமுல் (46). இவா்கள் செவ்வாய்க்கிழமை ஆற்காடு வந்து கடைக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு சொக்கலிங்கம் பைக்கில் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

அமுல் பேருந்து ஏறுவதற்காக ஆற்காடு எம்ஜிஆா் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த மா்ம நபா் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் செல்லும்பொழுது கூச்சலிட்டுள்ளாா். அப்போது அங்கிருந்தவா்கள் அந்த நபரை பிடித்து ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் ராணிப்பேட்டை காரைப் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (35) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 பவுன் தாலி சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.