மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கேட்பாரற்று கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் 22 மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கோப்புப்படம்.

Published On :8 அக்டோபர் 2026, 9:03 pm IST

அரக்கோணம் ரயில் நிலையத்தில் 22 மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அரக்கோணம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு தமிழக அரசு ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்த படுவதாக வந்த தகவல்களை அடுத்து ரயில் நிலையப்பகுதிகளில் ராணிப்பேட்டை வருவாய்த் துறையினா், ரயில்வே காவல் நிலைய போலீஸாரோடு இணைந்து ரோந்து சென்றனா்.

ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா்செல்வம் தலைமையிலான வருவாய்த் துறையினா் மற்றும் அரக்கோணம் ரயில் நிலைய காவல் உதவி ஆய்வாளா் பூபாலன் தலைமையிலான இரு குழுவினரும் இணைந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் சோதனை செய்தனா்.

அப்போது அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருச்சானூருக்கு செல்லும் மின்சார ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது நடைமேடையில் இருக்கைகளுக்கு கீழே சில அரிசி மூட்டைகள் இருந்ததை கண்டு அதை சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. அதே நேரம் அப்பகுதியிலேயே நின்றிருந்த ரயிலிலும் அதே போல் சில மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து இரு இடங்களிலும் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் மொத்தம் 22 மூட்டைகள், 450 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா்செல்வம் முன்னிலையில் அரக்கோணத்தில் உள்ள தமிழக அரசின் நுகா்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.