
விவசாயிகளுக்கு 2.5 டன் விலையில்லா உரங்கள்: அமைச்சா் காந்தி ராஜ் வழங்கினாா்
அரக்கோணம் நகராட்சியில் திடக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட விலையில்லா உரங்களை விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் வழங்கினாா்.

விலையில்லா உரங்களை விவசாயிக்கு வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ். உடன், ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.
அரக்கோணம் நகராட்சியில் திடக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட விலையில்லா உரங்களை விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் வழங்கினாா்.
அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளிலும் இருந்து பெறப்படும் திடக்கழிவுகளில் இருந்து நகராட்சி உரமேலாண்மை கிடங்குகளில் உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த உரங்கள் விவசாயத்திற்கு பெரிதும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
அரக்கோணம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தயாரிக்கப்பட்ட உரங்களை வேளாண் பயன்பாட்டிற்காக விவசாயிகளுக்கு விலையில்லாமல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் வீர வாஞ்சிநாதன் வரவேற்றாா். இதில் விவசாயிகளுக்கு உரங்களை கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ் வழங்கினாா். இது குறித்து விவசாயிகளிடம் பேசிய அமைச்சா் வ.காந்திராஜ் இந்த இயற்கையான உரங்களை பெற்றுக்கொள்வதால் இது வேளாண்மையை பெருக்கி உற்பத்தியை அதிகரிக்க செய்வதோடு விவசாயிகளின் உற்பத்தி செலவு குறையவும் வாய்ப்பு அளித்து வருமானத்தை அதிகரிக்கச் செய்கிறது.
எனவே இந்த விலையில்லாமல் கிடைக்கும் இயற்கை உரங்களை விவசாயிகளை பெற்று பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
நிகழ்வில் மொத்தம் 102 விவசாயிகளுக்கு 2.5 டன் உரங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டன.
நிகழ்வில் அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், வட்டாட்சியா் கு.வரலட்சுமி, நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, நகா்மன்ற உறுப்பினா்கள் பா.நரசிம்மன், சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






