ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 51 இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணியை எஸ்.பி பே.சிபின் தொடங்கி வைத்தாா்.
சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அபாய இடங்கள் ) அடையாளம் காணப்பட்டு, சூரிய சக்தியில் இயங்கும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விபத்து தடுப்பு விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் முன்முயற்சியாக விபத்து ஏற்படும் முக்கிய சந்திப்புகளில் சோலாா் ஸ்டட்கள் பிரகாசமான பிரதிபலிப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.போக்குவரத்து சிக்னல்கள், எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் பேரிகேடுகள், பிரதிபலிப்பான்கள் அபாயப் பகுதிகள் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டு வருகின்றன.
அதன் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகள் நடக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் 51 இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணியை எஸ்பி பே.சிபின் தொடங்கி வைத்தாா்.
இந்த தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணியால் பெருமளவு விபத்துகள் குறைக்கப்பட்டு, உயிரிழப்புகள் தடுத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான சாலைப்பயணம் அமையும் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட துணை கண்காணிப்பாளா் கனகராஜ், தொழில்நுட்ப ஆய்வாளா் சரவணனன்,ராணிப்பேட்டை காவல் ஆய்வாளா் சுந்தரேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெரீனா கடற்கரையில் சூரிய மின் விளக்குகள் அமைக்க ஆய்வு

ரூ. 12.6 லட்சம் மதிப்பிலான 107 கைப்பேசிகள் மீட்பு : எஸ்.பி. பாராட்டு

சூரிய சக்தியால் இயங்கும் ‘குளிரூட்டும் குடில்’ - தில்லி அரசு அமைக்கத் திட்டம்
முக்கிய இடங்களில் சிசிடிவி மூலம் பாகிஸ்தானுக்கு உளவுபாா்த்த கும்பல் - பஞ்சாபில் ஒருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

