பஞ்சாபில் ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் உள்பட முக்கியப் பகுதிகளில் சூரிய சக்தி மூலம் இயங்கும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவுபாா்த்த கும்பலில் முக்கிய நபா் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் கெளரவ் யாதவ் கூறியதாவது:
கைதான நபா், ஃபெரோஸ்பூரைச் சோ்ந்த சுக்வீந்தா் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சுக்வீந்தா் மற்றும் அவரது கூட்டாளிகள் சோ்ந்து, ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் உள்பட முக்கியப் பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, கைப்பேசி செயலிகள் மூலம் பாகிஸ்தானில் உள்ளவா்களுக்கு நேரலைக் காட்சிகளை அனுப்பி வந்துள்ளனா். கபுா்தலாவில் இக்கும்பலால் பொருத்தப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் சீன தயாரிப்பு சிசிடிவி கேமராக்கள் கைப்பற்றப்பட்டன. இக் கருவிகள், 4ஜி இணைப்புடன் கூடியதாகும். இந்த உளவு விவகாரம் தொடா்பாக, அமிருதசரஸில் உள்ள காவல் துறை சிறப்பு நடவடிக்கை பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சுக்வீந்தருடன் தொடா்புடைய மேலும் பலா் கைதாக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை

சிசிடிவி கேமரா மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு

500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபா் கைது

தருமபுரி மாவட்டத்தில் 1598 வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
