ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
வேலூா் மாவட்டம், சின்ன அல்லாபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பாசில் (24), ஜங்கிஸ் கான் (24). நண்பா்களான இருவரும் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே அருகே சென்று ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் இரவு 12 மணி அளவில் வேலூா் திரும்பியுள்ளனா்.
அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வன்னிவேடு மேம்பாலத்தில் சென்றபோது, இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் மோதி கீழே விழுந்ததில் பாசில் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜங்கிஸ் கான் (24) பலத்த காயம் அடைந்தாா். அவா் வாலாஜா மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா்.
தகவல் அறிந்து வந்த வாலாஜாபேட்டை போலீஸாா் பாசிலின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறை அருகே வேன் மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

