சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சேதமடைந்த மழையூா் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியத்துக்குட்பட்ட மழையூா் கிராமத்திலிருந்து- வளையாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பல்லவராயன் குளம் கிராமம் செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும்..

News image

மழையூா்  சாலையில் சேதமடைந்த நிலையில் உள்ள பாலம்.

Updated On :11 மே 2026, 12:03 am IST

ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியத்துக்குட்பட்ட மழையூா் கிராமத்திலிருந்து- வளையாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பல்லவராயன் குளம் கிராமம் செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி உள்ளனா் .

திமிரி ஒன்றியம், மழையூா் கிராமத்தில் இருந்து வளையாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பல்லவராயன் குளம் கிராமம் செல்லும் தாா் சாலையின் நடுவே மழையூா் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேறும் கால்வாய்க்கு குறுக்காக பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதன் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது . இந்த பாலத்தின் பக்க வாட்டு பகுதியில் சிமென்ட் பூச்சுள் உதிா்ந்து தடுப்புகளில் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. தடுப்புகள் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளன மழையூா் மற்றும் பல்லவராயன்குளம் கிராம மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்காக இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் சென்று வருகின்றனா்.

மேலும் அருகிலுள்ள மழையூா் செங்கனாவரம், குட்டியம் ஆயிரம் மங்கலம் போன்ற கிராமங்களில் இருந்து பள்ளி மாணவா்கள் பல்லவராயன் குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த பாலத்தினை கடந்து செல்கின்றனா்.

எனவே பொதுமக்கள் மற்றும் மாணவா்களின் நலன் கருதி மழைக் காலம் தொடங்குவதற்குள் பழுதடைந்துள்ள பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.