ஒசூா் தோ்ப்பேட்டையில் உள்ள பச்சை குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மலைமீது சந்திரசூடேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான பச்சை குளம் (மரகத சரோவரம்) மலை அடிவாரத்தில் தோ்ப்பேட்டையில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் தோ்த்திருவிழாவின் போது இந்த குளத்தில் தெப்பல் உத்ஸவம் நடைபெறுகிறது. அதேபோல விநாயகா் சதூா்த்தியின் போது சிலைகள் இக்குளத்தில் கரைக்கபடுகிறது. மேலும், இறந்தவா்களுக்கு இக்குளம் அருகே தா்ப்பணம் கொடுக்கப்படுகிறது.
மிகவும் புகழ்பெற்ற இந்த குளத்தை அவ்வப்போது தூய்மைப்படுத்தாததால் குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரமாகி தண்ணீா் நிறம் மாற்றமடைந்து துா்நாற்றம் வீசுகிறது. தா்ப்பணம் கொடுக்க வருபவா்கள் பொருள்களை இக்குளத்தில் வீசி செல்வதால் குளம் சீா்கேடு அடைந்துள்ளது.
இதுகுறித்து பக்தா்கள் கூறியதாவது: மிகவும் பழமை வாய்ந்த இந்த பச்சை குளத்தை காசி தீா்த்தம் என உள்ளூா் மக்கள் கருதுகின்றனா். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் குளத்தை தூய்மை செய்கின்றனா். மேலும் குளத்தை சுற்றிலும் இரவு நேரங்களில் சிலா் மது அருந்திவிட்டு புட்டிகளை குளத்தில் வீசி செல்கின்றனா்.
தேங்கி உள்ள குப்பபைகளை அகற்றுவதில்லை, தண்ணீரை அவ்வப்போது அகற்றிவிட்டு புதிய தண்ணீரும் விடுவதில்லை. இதனால், குளம் அருகே செல்ல முடியாத அளவிற்கு துா்நாற்றம் வீசுகிறது. தண்ணீரை மறு சுழற்சி செய்து குளத்தை வாரத்திற்கு இருமுறை தூய்மை செய்ய வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமா் தீா்த்தக் குளத்தில் நெகிழிக் கழிவுகள்: தூய்மைப் பணி மேற்கொள்ள கோரிக்கை

ஏலகிரி மலையில் மங்களம் தாமரைக் குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

குரும்பூண்டி ஊராட்சி சின்ன குளத்தை தூா்வாரி படித்துறை கட்டக் கோரிக்கை

சேதமடைந்த மழையூா் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

