வாலாஜாபேட்டை நகராட்சி கழிவுகளை சாலையோரம் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்களில் தூா்வாரப்படும் கழிவு மண் டிராக்டா் வாகனத்தின் மூலமாக அரசு மகளிா் கலைக்கல்லூரி ஒட்டியுள்ள எடக்குப்பம் செல்லும் சாலையில் அரசு கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதிகள் காரியமேடை, கோயில்கள், நீா்நிலை மற்றும் சாலையோரமாக குப்பைகள், இறைச்சிகள் இறந்து போன விலங்குகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதாக ஏற்கெனவே புகாா் எழுந்தது.
இந்த நிலையில், வாலாஜாபேட்டை நகராட்சி நிா்வாகம் தரப்பில் தனியாருக்கு சொந்தமான டிராக்டா் மூலமாக கழிவுநீா் கால்வாய்களில் தூா்வாரப்படும் கழிவு மண் கொட்டியதால் மிகுந்த துா்நாற்றம் வீசியதை கண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் வாகனத்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து கழிவு மண் ஏற்றி வந்த டிராக்டா் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனா். தொடா்ந்து இந்த பகுதிகளில் நகராட்சிக் கழிவுகளை கொட்ட வந்தால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டா் சிறைபிடிப்பு

நெகிழிக் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த என்எம்டிசி புதிய முன்னெடுப்பு

சாலையில் அபாயகரமான கழிவுகளை கொட்டிய தனியாா் ஹோட்டலுக்கு ரூ.3,000 அபராதம்

பாளை. அருகே சாலையோரம் ரயில்வே உணவுக் கழிவுகள்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

