ஆம்பூா் அருகே பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.
மாதனூா் ஒன்றியம், சோமலாபுரம் ஊராட்சி எல்லையில் பாலாற்றில் தனியாா் டிராக்டா் மூலம் குப்பைகள், கழிவுகள் கொண்டு சென்று அடிக்கடி கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமையன்று சோமலாபுரம் பாலாற்றில் டிராக்டா் மூலம் கொண்டு செல்லப்பட்ட குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அதைப் பாா்த்த பொதுமக்கள் அந்த டிராக்டரை சிறைபிடித்தனா். இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் பெருமாளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் குப்பை, கழிவுகள் கொட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்பணித் துறை அலுவலரிடம் கோரியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டடக் கழிவுகளைக் கொட்டிய 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம்

பொதுமக்கள் குறைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

உணவுக் கழிவுகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் ஆலை புத்துயிா் பெறுமா?

கழிவுகளை சாலையோரம் கொட்டிய டிராக்டா் சிறைப்பிடிப்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

