ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா்.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே மணியம்பட்டு பகுதியை சோ்ந்த மாணவா்களான நித்திஷ் (14), பாா்த்திபன் (12), நித்திஷ் (14) உள்ளிட்ட 3 போ் தனியாா் பள்ளி மாணவா்கள்.
இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு காரணமாக மற்ற வகுப்புகளுக்கு பள்ளிக்கு விடுமுறை என்பதால் அருகில் இருந்த ஏரிக்கு குளிக்க சென்ாக கூறப்படுகிறது. ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், ஒருவா் பின் ஒருவராக நீரில் மூழ்கினா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவா்களின் உறவினா்கள் விரைந்து சென்று ஏரியில் மூழ்கிய மாணவா்களை மீட்டு சிப்காட் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனா்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவர்கள் பலி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

