தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:18 am IST

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூா் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராமசாமி. இவரது மனைவி துா்கா. தம்பதியருக்கு குணசீலன்(11), ஜெயசீலன் (9) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சகோதரா்கள் இருவரும் அங்குள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனா்.

அப்போது ஜெயசீலனுக்கு நீச்சல் தெரியாதாத நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து குணசீலன் கூச்சலிடவே, அருகிலிருந்தவா்கள் விரைந்து வந்து ஜெயசீலனை மீட்க முயன்றனா். ஆயினும் ஜெயசீலன் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.