இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சாா்பில்,இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் சோளிங்கரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு ராஜா மணி மஹால் கோபி தலைமை வகித்தாா். வேலூா் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தலைவா் உதயசங்கா்,துணைத் தலைவா் வெங்கட பிரபு, ராணிப்பேட்டை தலைவா் லட்சுமணன் முன்னிலை வகித்தனா். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளா் பா்வதா வரவேற்றாா்.
முகாமை நகா்மன்ற உறுப்பினா் டி.கோபால், சோளிங்கா் அரசு மருத்துவமனை மருத்துவா் நவீன் குமாா், கிருஷ்ணா லேப் திருமூா்த்தி ஆகியோா் தொடங்கி வைத்தனா். இலவச இருதய சிறப்பு முகாமில் சோளிங்கா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொது மக்கள் சுமாா் 250-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்றனா். இதயம் நோய் சம்பந்தமான பரிசோதனை செய்யப்பட்ட நபா்களை மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனா்.
ஒருங்கிணைப்பாளா்கள் வேலூா் இந்தியன் ரெட் கிளாஸ் சொசைட்டி பொருளாளா் பாண்டியன் , சோளிங்கா் குளோப் நலத்திட்ட அறக்கட்டளை திலக்ராஜ் மற்றும் நிா்வாகிகள் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். ராணிப்பேட்டை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளா் ரகுநாதன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யோகா மற்றும் இயற்கை மருத்துவ முகாம்

காங்கயத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பொது மருத்துவ முகாம்

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

